`படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி!' - ஷிவ் நாடார் நன்கொடையால் ஜொலிக்கும் மதுரை அரசுப் பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

`படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி!' - ஷிவ் நாடார் நன்கொடையால் ஜொலிக்கும் மதுரை அரசுப் பள்ளி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தான் படித்த மதுரை இளங்கோ அரசுப் பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதனால், இளங்கோ அரசுப் பள்ளி புதிய கட்டடங்களுடன் ஜொலிக்கிறது. ஹெச்.சி.எல். அதிபர் ஷிவ்நாடார் பெரும் கொடையாளி. தன் சொத்தில் 10 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சாதாரண அரசுப் பள்ளியில் படித்த இவர், இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி. மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகேயுள்ள இளங்கோ அரசுப் பள்ளியில்தான் 7 மற்றும் 8-ம் வகுப்பு படித்தார் ஷிவ் நாடார். 1937-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளி சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது.
பக்கத்தில் உள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கு சேர்ந்து படித்து வந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு தான் படித்த பள்ளிக்கு ஷிவ் நாடார் விசிட் அடித்தார். பள்ளியின் நிலையைக் கண்ட அவர் கலங்கிப் போனார். படித்த பள்ளிக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென்று கருதிய அவர், இளங்கோ பள்ளிக்கு ரூ.15 கோடி ஒதுக்கினார். தொடர்ந்து, இளங்கோ பள்ளிக்கென்று புதியதாக இரு கட்டடங்கள் கட்டும் பணிகள் 2017-ம் ஆண்டு தொடங்கியது. அழகிய கட்டடங்கள் 24 வகுப்பறைகளுடன் எழுந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் பள்ளியில் நடைபெறும் பணிகளை ஷிவ் நாடார் பார்த்துவிட்டுச் செல்வார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியார் ராஜேந்திரன், ``பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கரும்பலகை மட்டுமே 15 அடி நீளம் கொண்டது.
பள்ளிக்குள்ளேயே தண்ணீருக்காக தனி பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும். கழிவறைகள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 100 கணினிகளுடன் லேப், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லைப்ரரி, பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. கூடைப்பந்து விளையாட்டில் எங்கள் பள்ளி சாம்பியன் என்பதால் நவீன கூடைப்பந்து மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முற்றிலும் முடிந்து விடும்'' என்று உற்சாகத்தோடு சொல்கிறார். நன்கொடை கொடுத்ததோடு ஷிவ் நாடார் முடித்துக்கொள்ளவில்லை. பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நீருபவி திபேந்திர சிங் என்பவரை ஹெச்.சி.எல். மேலாளராக நியமித்துள்ளது. விளைவாக இளங்கோ பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் சார்பாக ஸ்காலர்ஷிப் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் மாணவர்கள் படித்த பள்ளிக்கு உதவ முன் வர வேண்டுமென்ற வேண்டுகோள் விடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews