👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தருமபுரியில் அரசு பள்ளி வளாகத்தில் அழிந்து வரும் மர வகைகளை நடவு செய்து வரும் ஆசிரியர், மாணவர்களையும் தத்தமது வீடுகளில் மரம் வளர்க்க ஊக்குவித்து வருகிறார்.
மரம் வளர்ப்பு என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலவாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் சங்கர் என்பவர், பள்ளி வளாகத்தில் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு இந்த பள்ளிக்கு மாற்றலாகி வந்த இவர், இயற்கை மீது கொண்ட பேரார்வத்தால் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அழிந்து வரும் நாட்டின மர வகைகளை மீட்டெடுக்கும் நோக்கிலும் இவர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் பள்ளி வளாகத்தில் வாகை, புங்கமரம், அத்திமரம், அகத்திமரம், நாவல்மரம் என 620 மரங்களை நடவு செய்துள்ளார்.
ஒரு பொருளையோ, இடத்தையோ அடைவது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதனை தக்கவைத்துக்கொள்வதும், பராமரிப்பதும் முக்கியமானது. அந்த வகையில் மரங்களை நடவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், உணவு இடைவெளிகளின்போது மரங்களில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை அழிக்க மருந்து தெளிக்கும் பணியிலும் சங்கர் ஈடுபடுகிறார்.
இவரது இந்த பணிக்கு சக ஆசிரியர்களும், மாணவர்களும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். முதலில் தேசிய பசுமைப் படை என்னும் பெயரில் 50 மாணவர்களை வைத்து துவங்கப்பட்ட இந்த பணியில், தற்போது மாணவர்கள் தங்களை பெருமளவில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
பள்ளி துவங்குவதற்கு முன்பும், அதற்கு பின்பும் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவது, உலர்ந்த இலைகளை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவது என மாணவர்கள் செய்யும் பணி மெச்சத்தக்க வகையில் உள்ளது. இவர்கள் மர வளர்ப்பை பள்ளியில் மட்டும் மேற்கொள்ளாமல், தத்தமது வீடுகளிலும் மரம் வளர்க்க ஆசிரியர் சங்கர் ஊக்குவித்து வருகிறார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U