👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
நாகர்கோவிலை அடுத்துள்ள இடலாக்குடியில் சதவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 2 வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதோடு, ப்ரொஜக்டர், சிசிடிவி கேமராக்கள், ஆர்.ஓ. குடிநீர் என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன வசதிகள் மட்டுமின்றி, தரமான முறையில் பாடம் கற்பிக்கப்படுவதால், சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U