குழந்தைகளுக்கு எமனாகும் பிஸ்கட் ... அதிர வைக்கும் பிஸ்கட் ஆபத்துகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

குழந்தைகளுக்கு எமனாகும் பிஸ்கட் ... அதிர வைக்கும் பிஸ்கட் ஆபத்துகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்று பெரும்பாலான வீடுகளில் ஸ்கூல் முடித்து குழந்தைகள் வீடு திரும்பும் போது அவர்களுக்கு பிஸ்கட் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. இன்னும் சில வீடுகளில், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் போது, கூடவே ஸ்நாக்ஸ் டப்பாவில் நான்கைந்து பிஸ்கட்களைப் போட்டு அனுப்பி வைக்கிறார்கள். நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி' என்று அறிவிப்போடு கிடைக்கும் பிஸ்கட்களில் எல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலும், சக்தியும் இயற்கையாக கிடைப்பதில்லை என்பது தான் அதிர்ச்சியான செய்தி. ஊட்டச்சத்து நிபுணர்கள் பிஸ்கட்டை குழந்தைகள் நிச்சயமாக சாப்பிடக் கூடாது என்கிறார்கள். மிருதுவாக இருப்பதற்காக பிஸ்கட்டில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது.
அதன் பின்னர் உங்கள் குழந்தைகளைக் கவர்வதற்காக விதவிதமான வடிவங்களில் செய்வதற்காக பிஸ்கட்டில் சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்தும் சேர்க்கப்படுகின்றது. இதெல்லாம் காலப்போக்கில் மோசமான கொழுப்பாக மாறி பல பிரச்சனைகளக் கொண்டு வரும்.பிஸ்கட் பெரும்பாலும் மைதா மாவினாலேயே செய்யப்படுகிறது. கூடவே அதில் நார்ச்சத்து என்பது துளியும் கிடையாது. பிஸ்கட்டின் மிருதுத்தன்மை குறைந்தால், அதில் கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம். இப்படி பிஸ்கட் கொடுத்து, நம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை நாமே கெடுத்து வருகிறோம். அதிலும், கண்களைப் பறிக்கும் வண்ண க்ரீம்களில் பிஸ்கட் கொடுப்பதெல்லாம் காசு கொடுத்து நோயை வீட்டிற்கு அழைத்து வரும் செயல் தான்.
அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளான பொரி உருண்டை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, நட்ஸ் வகைகள், பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கம்பு மாவு உருண்டை, பச்சைப் பயிறு உருண்டை போன்றவைகளைக் கொடுத்து பழக்குங்கள். ஆரம்பத்தில் மறுப்பவர்கள் பின் அதன் ருசியுணர்ந்து சாப்பிட ஆரம்பிப்பார்கள் இவை தவிர அந்தந்த சீசன்களில் கிடைக்கும் கொய்யாப்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், வெள்ளரி, நெல்லிக்காய் போன்றவற்றை கொடுத்து வந்தாலே போதுமானது. பழங்கள் என்றவுடன், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் லிச்சி, ட்ராகன் என்று பெயர் தெரியாத பழங்களின் லிஸ்ட் போடாதீர்கள். ஒரேயொரு கம்பு மாவு உருண்டையே குழந்தைகளுக்கு ஒரு வேளை வயிறு நிறைந்து விடும். இப்படி இருக்க ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள கூடிய பிஸ்கட்டுகளை குழந்தைகளுக்கு தராமல் இருப்பதே மிகவும் நல்லது. பாரம்பரிய உணவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்போம். ஆரோக்கியத்தைக் காப்போம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews