👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
திருப்பூர் அருகே உள்ள முத்தூர்வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை கவர்ந்து இழுக்க குளிர்சாதன வசதி செய்து கொடுத்து, ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மு.வேலாயுதம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புறத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த 42 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் அதே பகுதியில் 3 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைந்து விடும் என நினைத்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்தனர்.
அதன்படி வகுப்பறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறையும் அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த வசதிகளுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் பஸ் வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களை அழைத்து வர பள்ளி ஆசிரியர்கள் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆட்டோவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முதல் நவீன வசதியுடன் வகுப்புகள் தொடங்கி உள்ளது. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலிஷ் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U