அங்கன்வாடியில் அழுத குழந்தைக்கு காலில் சூடு வைத்த கொடுமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 26, 2019

அங்கன்வாடியில் அழுத குழந்தைக்கு காலில் சூடு வைத்த கொடுமை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் அருகே அங்கன்வாடியில் அழுதுகொண்டே இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு, அங்கவாடி பணியாளர் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கிராமம், நொரச்சிவளவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(35), விவசாயியான இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு சஸ்வின்(4) என்ற மகனும், இரண்டரை வயதில் சமஸ்கிருதி என்ற மகளும் உள்ளனர். இதில் சஸ்வின் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். சமஸ்கிருதியை அருகில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், அங்கன்வாடிக்கு சென்ற சமஸ்கிருதி மாலை வீட்டிற்கு வந்ததும், அழுதுகொண்டே இருந்துள்ளார். பெற்றோர் விசாரித்ததில் அங்கன்வாடி பணியாளர் கிருஷ்ணவேணி டீஸ்பூனை காய்ச்சி காலில் சூடு வைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நேற்று காலை அங்கன்வாடிக்கு சென்று கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, அழுதுகொண்டே இருந்ததால் சூடு வைத்ததாக அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சமஸ்கிருதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சுரேஷ் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த போலீசார் புகார் எதுவும் வேண்டாம் எனவும், இருவரும் உறவினர் முறை என்பதால் ஊர் பெரியவர்களை அழைத்து வந்து சமாதனாமாக செல்லுமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி புகார் அளிக்க முடியாமல் திரும்பிச்சென்றார். மேலும், கிருஷ்ணவேணி மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டரை வயது குழந்தைக்கு, அங்கன்வாடி பணியாளர் சூடு வைத்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews