👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தண்டராம்பட்டில் உள்ள அரசு விடுதி காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று விடுதி மாணவர்கள் தங்களது உடமைகளுடன் வெளியேறினர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு விடுதி காப்பாளர் அமாவாசை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து விடுதி மாணவர்கள் நேற்று முன்தினம் விடுதி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா, தாசில்தார் நடராஜன், விஏஓ சம்பத் ஆகியோர் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவர்கள் விடுதி காப்பாளர் அமாவாசை மீண்டும் விடுதிக்கு வந்தால் மட்டுமே நாங்கள் விடுதிக்கு வருவோம் என்று கூறினர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வீட்டுக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U