👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒழுகும் மேற்கூரை, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் பாழடைந்த கட்டடம், மழையில் ஊறிய புத்தகங்கள் எனப் பரிதாப நிலையில் செயல்பட்டுவருகிறது நீலகிரி மாவட்ட கொலக்கொம்பை கிளை நூலகம்.

மலை மாவட்டமான நீலகிரியில் 57 கிளை நூலகங்கள், 23 கிராமப்புற நூலகம்,19 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் கீழ் செயல்பட்டுவருகின்றன. நூலகர் மற்றும் உதவியாளர் என சுமார் 150 பேர் பணியில் உள்ளனர். நீலகிரியில் பெரும்பாலான நூலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
கைப்பேசி பயன்பாடு கணினி மயம் போன்ற காரணங்களால் நூலகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போனாலும், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நூலகங்களுக்குச் செல்கின்றனர். இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை கிளை நூலகம் மிகவும் மோசமான நிலையில் பாழடைந்த கட்டடத்தில் இயங்கிவருகிறது. ஒழுகும் மேற்கூரையால் பல ஆயிரம் புத்தகங்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மழையிலிருந்து புத்தகங்களைக் காக்க பிளாஸ்டிக் போர்வைகள் கொண்டு மூடப்படும் அவலநிலை ஏற்படுகிறது. மேலும், எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்துக்குச் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து தூதூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறுகையில், ``சுமார் ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ள கொலக்கொம்பை கிளை நூலகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. சிறிய அறையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளனர்.மேற்கூரை சீரமைக்கப்படாததால் ஒவ்வொரு மழைக்கும் பல நூறு புத்தகங்கள் சேதமடைகின்றன. புதிய கட்டடத்தில் நூலகம் அமைத்துத் தரக்கோரி பல முறை சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. இந்த நூலகத்தை மூடுவதே அரசின் திட்டமாக உள்ளது” என்றார்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், ``முதலில் இது நூலகமா என்றே எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது. உள்ளே செல்லவே பயமா இருக்கும். நாளிதழ்கள், வார இதழ்கள் தவறாமல் வருகிறது. ஆனால், உட்கார்ந்து படிக்க இடம் இல்லை. அலமாரி பற்றக்குறை காரணமாகப் புத்தகங்களை தரையிலும், மூட்டையிலும் கட்டி வைத்துள்ளனர். நமக்குத் தேவைப்படும் நூல்களைத் தேடவே முடியாது. இதனால் பெரும்பாலானோர் இந்த நூலகத்துக்குச் செல்வதே இல்லை” என்கிறார்.
கொலக்கொம்பை மட்டுமல்லாது நீலகிரியில் உள்ள பல கிராமப்புற, கிளை நூலகங்களில் இடப் பற்றாக்குறையால் அரிய பொக்கிஷமான பல நூல்கள் மூட்டைகளில் கட்டப்பட்டு செல்லரித்து வீணாவது வேதனையை ஏற்படுத்துகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U