'நீட்' எழுத முடியாத 500 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

'நீட்' எழுத முடியாத 500 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கர்நாடகாவில், ரயில் தாமதத்தால் 'நீட்' தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' நேற்று(மே 5) நடந்தது. கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி நகரில் இருந்து மைசூரு செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ், தினமும் மாலை 6:20 மணிக்கு ஹூப்பள்ளியில் புறப்படும். மறுநாள் காலை 6:10 மணிக்கு, பெங்களூரை அடையும். இந்த ரயிலில், நேற்று முன்தினம் மாலை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும், நேற்று நடந்த, 'நீட்' தேர்வுக்கு, பெங்களூரு கல்லுாரிகளில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை, 6:10 மணிக்கு, பெங்களூரு வர வேண்டிய ஹூப்ளி எக்ஸ்பிரஸ், மதியம், 2:30 மணிக்கு வந்தடைந்தது. ஆனால் நீட் தேர்வு மையத்தில், 1:30 மணிக்கே மாணவர்கள் ஆஜராகியிருக்க வேண்டும். அதனால், 500 மாணவர்களும், 'நீட்' தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரயிலில் வரும்போதே, சில மாணவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலருக்கு, 'டுவிட்டரில்' இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். அதில், 'ரயில் மிக தாமதமாக வந்து கொண்டிருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்தை அடைய முடியாது. அதனால், சிறப்பு அனுமதி அளித்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'கர்நாடகாவில், ரயில் தாமதம் காரணமாக, 'நீட்' தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்; அவர்களுக்கு, மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:
Happy to announce that #Karnataka Students who missed #NEET exam , due to railway delay will get another chance.@MoHFW_INDIA @HRDMinistry @PIB_India @MIB_India @DG_NTA @cbseindia29 @ciet_ncert @DDNewsLive @airnewsalerts @DVSBJP@CMofKarnataka — Chowkidar Prakash Javadekar (@PrakashJavdekar) May 6, 2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews