பிளஸ் 2 முடித்துவிட்டு எஞ்சினியரிங் படிக்க விரும்புபவர்கள் - ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்பும் வேலைவாய்ப்பும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 11, 2019

பிளஸ் 2 முடித்துவிட்டு எஞ்சினியரிங் படிக்க விரும்புபவர்கள் - ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்பும் வேலைவாய்ப்பும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ்2 படிப்பு முடித்துவிட்டு எஞ்சினியரிங் படிக்க விரும்புபவர்கள் அதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்வது அவசியம். சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் துறைகள் மட்டும்தான் எஞ்சினியரிங் துறை என பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், பொறியியல் துறைகளின் எண்ணிக்கை ஏராளம் உள்ளன.
ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிக்க தேவையான கல்வித் தகுதி, ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஹிந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் இயக்குநர் மற்றும் தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ். இவர் இந்திய வானூர்தி சங்கத்தின் சென்னைப் பிரிவு தலைவராகவும் உள்ளார். ‘‘பொதுவாக எஞ்சினியரிங் துறை நான்கு வருடப் படிப்பு கொண்டது. எஞ்சினியரிங் படிப்புகளில் புகழ்பெற்ற ஒரு துறை ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங். இத்துறையில் பி.இ., பி.டெக்., டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க +2-வில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவை கொண்ட பாடப்பிரிவை எடுத்து அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளில் சேர கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல 2 மணி நேரம் என்றால் அதை 1 மணி நேரமாக குறைப்பது எப்படி போன்ற பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். விமானங்களை ஓட்டுவதில் விருப்பம் உள்ளவர்களை ஊக்குவிப்பதும், நவீன டிரோன் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்துவது, விமானத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை கற்பிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்’’ என்றவர் இப்படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் விவரித்தார். ‘‘இந்தியாவில் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர்கள் விமானத்துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும். இதுதவிர பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரோ, சிவில் ஏவியேஷன், நேஷனல் ஏரோநாட்டிக்கல் லேபாரட்டரி, அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை ஆகியவற்றிலும் பணிபுரிய முடியும்.
வானமே நமது எல்லை என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி, ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் பாடப் பிரிவானது மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. விமானம் போன்ற பறக்கும் ஊர்திகளை வடிவமைக்கும் அளவுக்கு மாணவர்களின் திறன் வளர்க்கப்படும். மாணவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறும் வகையில் கருத்தரங்குகளும், பட்டறைகளும் நடத்தப்படும். மாணவர்களை கள ஆய்வுக்கு அழைத்துச் சென்று வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட வழி செய்வார்கள்’’ என்கிறார் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ். பொதுவாக ஒரு கல்லூரி என்றால், தரமான ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும். அதுபற்றி கூறுகையில், ‘‘தரமான தொழில்நுட்பக் கல்வியை அளிப்பது மற்றும் தனித்துவமான துறை அனுபவங்களைத் தருவதை நோக்கமாகக் கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வானூர்தி வடிவமைப்புகளை கற்றுத் தருவதோடு, சிக்கலான விஷயங்களை உருவாக்கி அவற்றுக்கு நிரந்தரமான நீடித்த தீர்வுகளைக் காண வழிவகை செய்ய வேண்டும்.
ஏரோநாட்டிக்கல் படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான வானூர்தி துறையில் உள்ள இப்போதைய நடைமுறைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும். அதேபோல நாம் ஏரோநாட்டிகல் படிக்க விரும்பும் கல்வி நிறுவனத்தில் Link Flight Simulator, Cessna 172L Aircraft, Avionics Lab, Subsonic Wind Tunnel, Lear Jet Aircraft, Supersonic Jet Facility, Wagner Beam, Polariscope, Hele Shaw Apparatus, Tiger Moth Aircraft, Engine Maintenance Lab, Turbo Propeller Engine NK-12, Lycoming Piston Engine, Free Jet Apparatus உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மாணவர்கள் இனிவரும் காலங்களில் பல்வேறு போட்டிகளைச் சமாளிக்க வேண்டும். சிலபஸ் தாண்டி படிக்க வேண்டும். வெறுமனே பொறியியல் துறை பாடங்களை மட்டும் பயின்றால் பயனில்லை. படிக்கும் காலங்களில் ஆஃப்ஸ் மற்றும் சாஃப்ட் ஸ்கில் கற்றுக்கொண்டு நிறைய கன்டெஸ்ட்களில் பங்கேற்க வேண்டும்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews