பிள்ளைகளின் மருத்துவ கனவுக்காக 2.5 லட்சம் செலவழிக்கும் பெற்றோர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2019

பிள்ளைகளின் மருத்துவ கனவுக்காக 2.5 லட்சம் செலவழிக்கும் பெற்றோர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரது தந்தை கூறுகையில் ‘என் மகன் நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்றான். அந்த மதிப்பெண்ணுக்கு கால்நடை மருத்துவ பாடப் பிரிவுதான் கிடைத்தது. அவன் எம்பிபிஎஸ் சேர விரும்புகிறான். ஆகவே அடுத்த ஆண்டு தேர்வு எழுதவுள்ளான். ஒரு ஆண்டு நீட் பயிற்சிக்கு தனியார் வகுப்புகள் 1-2.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன’ என்றார். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பல்வேறு நகரங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம், நண்பகல் 12 மணி முதலே சோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, தாங்கள் அணிந்து வந்த அணிகலன்களை மாணவிகள் அகற்றிய பின்னரே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:- நீட் தேர்வு எளிமையாக இருந்தது. இயற்பியல் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. மாநில பாடத் திட்டத்தில் இருந்து குறைவாகவே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரது தந்தை கூறுகையில் ‘என் மகன் நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்றான். அந்த மதிப்பெண்ணுக்கு கால்நடை மருத்துவ பாடப் பிரிவுதான் கிடைத்தது. அவன் எம்பிபிஎஸ் சேர விரும்புகிறான். ஆகவே அடுத்த ஆண்டு தேர்வு எழுதவுள்ளான். ஒரு ஆண்டு நீட் பயிற்சிக்கு தனியார் வகுப்புகள் 1-2.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews