மாதிரி வாக்குப்பதிவு-Mock poll - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

மாதிரி வாக்குப்பதிவு-Mock poll

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேர்தல் நடைமுறைகளில் மிக மிக முக்கியமான நிகழ்வு மாதிரி வாக்குப்பதிவு. இதனை முறையாக நடத்தாவிடில் ஒட்டு மொத்த வாக்குப்பதிவும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த நடைமுறைகளை கவணமாக கையாளவும். Mock poll என்பது வாக்குப்பதிவு எந்திரம் முறையாக வேலை செய்கிறது என வாக்குப்பதிவு அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் அறிந்து கொள்வதற்கான நடைமுறை ஆகும்.
இது வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு துவங்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களுக்கு Mock poll வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் துவங்குவது குறித்து தொடர்பான எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். முகவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் அடுத்த 15 நிமிடங்கள் வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் காத்திருக்க வேண்டும். அவகாசம் அளிக்கப்பட்ட நேரத்திற்கு பின் ஒரு முகவர் மட்டும் வந்திருந்தாலோ அல்லது எவரும் வரவில்லை என்றாலோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மாதிரி வாக்குப் பதிவினை தொடர்ந்து நடத்தலாம்.
இந்நிகழ்வில் வாக்குச்சாவடி முகவர்களின் வருகை இன்மை குறித்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழில் Mock poll certificate ல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் குறிப்பிட வேண்டும். மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு வாக்குப்பதிவு அலுவலரும் ஒரு முகவரும் வாக்களிப்பதற்கான மறைவிடத்தில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு ஏதும் பதிவாகி இருக்கவில்லை என்பதையும் VVPAT உள்ளே வாக்கு பதிவு செய்யப்பட்ட சீட்டுகள் எதுவும் இல்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின்னர் Ballot பட்டனை அழுத்தி ஒவ்வொரு முகவரையும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவில் குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். எந்த ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் இல்லையோ அந்த வேட்பாளருக்கு பதிலாக வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவரோ அல்லது வருகை தந்திருக்கும் முகவர்களில் ஒருவரோ வாக்களிக்க வேண்டும். எல்லா வேட்பாளருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதி செய்ய வேண்டும். நேரமிருப்பின் 50 ற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்கலாம்.
அனைத்து முகவர்களையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட பின் கட்டுப்பாட்டு எந்திரத்தில் Close பட்டனை அழுத்தி Result பட்டனை அழுத்தி பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விபரம் , வேட்பாளர் வாரியாக பெற்றவாக்குகளின் விபரம் , VVPAT ல் அச்சாகியுள்ள வாக்குகளின் விபரம் ஆகியவற்றை சரிபார்த்து முகவர்களிடம் உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவிற்கு இடையில் VVPAT அல்லது வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டாலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் *Clear* பட்டனை அழுத்தி எந்த வாக்காளர்களுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்யவும். மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கையேடு Annexure 14 ல் உள்ளவாறு Mock Poll Certificate தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பம் பெற்று *வாக்குச்சாவடி தலைமை அலுவலர். நேரம் மற்றும் தேதியுடன் ஒப்பமிடவும்*
மாதிரி வாக்குப்பதிவு என்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதை கவணத்தில் வைத்து முறையாக இதனை நடத்துவது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கடமையாகும். Mock Poll முடிச்சாச்சு.. இனி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு Seal வைப்பது தான்... நமக்கு வாக்குப்பதிவு பொருள்களோடு வழங்கப்பட்ட Green paper seal, SPL Tag, Address tag, Strip seal இவைகளை எடுத்துக்கோங்க... *_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._* *_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews