வாக்குப்பதிவு பொருட்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

வாக்குப்பதிவு பொருட்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பாராளுமன்ற தேர்தல் பணிக்காக வேலை செய்ய இருக்கிற நாம் இந்த தொடரில் எப்படி வேலை செய்யனுங்கிறத வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடியில் ஒப்படைத்த பொருட்களை எப்படி சரிபார்க்கிறது என்பதை இந்த பகுதியில பார்க்கப்போகிறோம். மண்டல அலுவலர் ஒரு சாக்குப்பையில் கொண்டுவந்து வாக்குப்பதிவு பொருட்களை கொடுக்கும் போதே உங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடில் annexure 19 ல் உள்ளவாறு ஒரு பட்டியலை கொடுப்பார். அந்த பட்டியலை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு பொருட்களை நாமசரிபார்க்கனும். அதிலே இல்லாத பொருட்களை குறித்து வைத்து அடுத்த முறை மண்டல அலுவலர் வரும்போது பட்டியலை கொடுத்தால் தவறிய பொருட்களை மண்டல அலுவலர் மீண்டும் உங்களிடத்திலே வழங்கிடுவார்.
அது சரிதான்.. வாக்குப்பதிவுக்கான பொருட்களில் எதை எதை எப்படி பார்க்கனும். அதை இனி சுருக்கமாக பார்ப்போம்.. மண்டல அலுவலர் வழங்கிய control unit, balloting unit( வாக்காளர் எண்ணிக்கையினை பொறுத்து BU ன் எண்ணிக்கை மாறும்) பிறகு VVPAT ஆகியவற்றின் வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டு யாரும் எளிதில் எடுக்க முடியாதவாறும், சூரிய ஒளி நேரடியாக படாதவாறும் மறைவிடத்திலும் வைக்க வேண்டும். அடுத்தபடியாக படிவங்களில், படிவம் 17 Register of Voters வாக்காளர் எண்ணிக்கை அளவிற்கு போதுமானதா உள்ளதா எனவும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்தது Marked copy of electoral roll 1 no & working copy of electoral roll 3 No's இருக்கிறதா என பார்ப்பதுடன் அவைகள் பக்க எண்கள் விடுதலின்றி உள்ளதா? எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். அதிலே மிக முக்கியமா கவணிக்க வேண்டியது *வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் நீங்க பணிபுரிகிற வாக்குச்சாவடிக்கு உரியது தானானு ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்* அடுத்தபடியா கவணமாக இருக்கவேண்டியது *Indelible ink* 10 CC அளவிலே இரண்டு பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கும் அதில் மை உள்ளதா என்பதை சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள். Green paper seal, strip seal, special tag இவைகளையும் கவணமாக தனியாக எடுத்து வைத்துக்கொள்வதோடு. அவற்றில் உள்ள *வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.* Distinguishing mark rubber stamp ஐ அது நீங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு உரியது தானா என சரிபார்த்து தனியாக *உங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.*
Tendered votes க்காக சில வாக்குச்சீட்டுகளும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அவற்றையும் அதன் வ.எண்களை குறித்துக்கொண்டு தனியாக எடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்ததாக மெட்டல்சீல். இவைகளை தனியாக பாதுகாப்பாக வைத்த பின்னர் வாக்குப்பதிவு பொருட்களுடன் வழங்கப்பட்ட படிவங்களை தனித்தனியாக எடுத்து நன்றாக படித்துப்பார்த்து நீங்கள் அறியும்வண்ணம் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாளில் உங்களை அணுகும் தேர்தல் முகவர்களிடம் வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே உரிய ஆவணங்களுடன் வந்து வாக்குச்சாவடி முகவர்களாக பதிவு செய்துகொள்ள தெரிவித்து விடுங்கள். வாங்கிய பொருட்களை சரிபர்த்து வைத்த பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் Control unit, ballot unit, VVPAT ஆகியவற்றை இணைத்து அதனை ஒருமுறை வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து இயக்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வழங்கப்பட்ட போஸ்டர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் யாரும் கிழித்துவிடாதபடி பதுகாப்பாக ஒட்டிவிட்டு நீங்கள் உறங்கச் செல்லுங்கள். உங்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றிட போதிய தூக்கமும் அவசியம்... இப்போ ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். *_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._* *_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews