👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர்கள் கே.ஜி.கண்டிகையில் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே ஆசிரியர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டையை அடுத்த எஸ்.வி.ஜி.புரம், ராஜாநகரம், பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கே.ஜி.கண்டிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் தா. ராஜேந்திரன் ஆலோசனை வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் பாபு இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலர் லோகமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானபிரசன்னா வரவேற்றார். அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் தா.ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கே.ஜி.கண்டிகை கல்கி நகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொது மக்களை சந்தித்தனர்.
அரசுப் பள்ளிகளில் உள்ள கல்வித் தரம், கட்டமைப்பு வசதி, இலவச கல்வி உபகரணங்கள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு, ராமகிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழில் மற்றும் திருத்தணி வட்டார வளக் கல்விமைய பயிற்றுநர்கள் என 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U