👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பி.ஏ., அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) படிப்பு என்பது அரசாங்க பணிகள், அரசியல் பணிகளை இலக்காக கொண்ட மாணவர்களின் முன்னுரிமை படிப்பாக உள்ளது.யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., போன்ற முக்கிய தேர்வுகளில், அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இப்பாடத்திலிருந்தே அமைகிறது. பாடங்கள் கடினம் இல்லை என்பதால், போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் பொழுதே, எளிதாக பயிற்சி மேற்கொள்ள முடியும்.பிளஸ்2 ல் எந்த பிரிவை எடுத்து படித்த மாணவர்களும், இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பின் மூலம் மாணவர்கள் ஆளுமைத்திறன், பேச்சு திறன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.மருத்துவம், பொறியியல் பி.காம்., பி.எஸ்சி., கணிதம், போன்ற படிப்புகளை போன்று இத்துறைக்கு என, தனிப்பட்ட வேலைவாய்ப்புகள் இல்லை என்பது நிதர்சனம். ஆனால், அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள், அரசு போட்டித்தேர்வை இலக்காக கொண்டவர்களுக்கு இப்படிப்பு சரியான வழிகாட்டுதலாக அமையும்.
இப்படிப்பு, ஏறக்குறைய அனைத்து கலை அறிவியல் கல்லுாரிகளிலும் உள்ளது. இதுகுறித்து, கோவை அரசு கலை கல்லுாரி அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம், திருச்சி உட்பட, 12 அரசு கல்லுாரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. தேசிய அளவில், நல்ல தரத்துடன் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, ஐதராபாத் மத்திய பல்கலை, புதுச்சேரி பல்கலைகளில் இப்பாடப்பிரிவுகள் உள்ளன.இம்மாணவர்கள், அனைத்து போட்டித்தேர்வுகளையும் சக மாணவர்களை காட்டிலும் எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். தவிர, ஊடகத்துறை, கல்லுாரி பேராசிரியர் பணிக்கும் செல்லலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U