தினமும் யோகாசனம் செய்வதால் பெறும் நன்மைகள் எத்தனை தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

தினமும் யோகாசனம் செய்வதால் பெறும் நன்மைகள் எத்தனை தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நீங்கள் தினமும் யோகாசனம் செய்வதால் பெறும் நன்மைகள் எத்தனை தெரியுமா?Do you know the benefits of getting yoga daily? மனிதர்கள் மேன்மையான நிலையை அடைய உதவும் பல விடயங்களை உலகிற்கு அளித்த நாடு இந்தியா. அப்படி உலகிற்கு இந்திய அளித்த 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாரம்பரியம் கொண்ட ஒரு கலை தான் யோகாசன கலை. மனிதர்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும் சித்தர்கள் அளித்த இக்கலையை பயில்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். யோகாசனம் நன்மைகள் மன அழுத்தம் கடுமையான வேலை செய்பவர்கள், கணினி சம்பந்தமான வேலை செய்பவர்கள் தினமும் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலையில் உள்ள மனஅழுத்ததால் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வடிகாலாக யோகாசன கலை இருக்கிறது. சீரான சுவாசம் நமது உடல் நலம் சிறப்பாக இருக்க நமது சுவாசம் சீராக இருப்பதும், தூய்மையான காற்றை சுவாசிப்பதும் அவசியம் ஆகும். தினமும் யோகா சனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
இதயம்: தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பலம் பெறுகிறது.மேலும் நல்ல சீரான சுவாசம் கிடைப்பதோடு இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. ஆயுளையும் நீட்டிக்கிறது. அழகிய உடல் அமைப்பு: யோகாசனங்கள் செய்யும் போது நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தை பெறுகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளை சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது.
மன அமைதி: தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியடைகிறது.அதிகப்படியான வேலைபளு மற்றும் இன்ன பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை, சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது. இரத்த ஓட்டம்: யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நம்முடைய இரத்த ஓட்டம் சீரடைகிறது. இப்படி ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவை சிறிது சிறிதாக நீங்குகிறது.
மூளை: தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இதனால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. தினமும் யோகாசனங்கள் செய்பவர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு ஆற்றல்: நம்முடைய உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே அந்த நேர்மையான மனமகிழ்ச்சியில் நமக்கு பல மடங்கு ஆரோக்கியம் உண்டாகிறது. நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும். தொந்தி குறைப்பு:
இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும் பலருக்கும் வயிற்றில் தொந்தி அல்லது தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபத்தில் தொந்தியை குறைக்க முடியும். வலி: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், உடலுக்கு சற்று அழுத்தம் தரும் வகையிலான பணிகளில் ஈடுபடுபவர்கள் யோகாசனங்கள் செய்வது நல்லது. இதனால் தசை தளர்வடைவதை தவிர்த்து இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்ய முடிகிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் சிறந்த வலி நிவாரணியாக யோகாசன கலை செயல்படுகிறது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews