👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொறியியல் கலந்தாய்வு விவகாரங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடாது என்று அதன் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
2019-ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை மட்டும் நடத்த அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை மையக்குழுவை தமிழக அரசு அண்மையில் அமைத்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த குழுவில் உயர்கல்வித்துறை செயலர் மங்கத் ராம்சர்மா, தொழில்நுட்ப இயக்குநரக இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறியியல் மாணவர் சேர்க்கை மைய தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ராஜினாமா செய்ததுடன் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசாணையை ரத்துசெய்யுமாறு அரசுக்கு சூரப்பா தற்போது கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒரு வருடம் மட்டும் பழைய விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப இயக்குநரகம் மூலம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,
அடுத்தாண்டு முதல் இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தினால் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதத்தில் சூரப்பா கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொழில்நுட்ப இயக்குநகரம் கலந்தாய்வினை நடத்தினால் அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என்றும் சூரப்பா திட்டவட்டமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது:தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் 3 ஆண்டுகள் நடத்தும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அடுத்த 2 கல்வி ஆண்டுகளுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், என்னிடம் ஆலோசனை செய்யாமல் கலந்தாய்வு நடத்துவதற்குரிய குழுவை மாற்றி அமைத்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுக்குக் கடிதம்
அதன்படி கடந்த டிசம்பர் 28-ல் உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையின்படி தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தும் குழுவுக்கு உயர்கல்வித் துறை செயலாளர் தலைவராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும் என ஏற்ெகனவே அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து பொறியியல் கலந்தாய்வுக்குழுவில் இருந்து விலகினேன். மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்தினால் அதுதொடர்பான விவகாரங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடாது எனவும் அரசிடம் கூறியுள்ளேன். எனினும், மாணவர்கள் நலன்கருதி புதிய அரசாணையை அரசு ரத்து செய்தால் பொறியியல் கலந்தாய்வை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்