குழந்தைகள் நாணயத்தை சாப்பிட்டால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் செய்ய வேண்டிய முதலுதவிகள்.!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2019

குழந்தைகள் நாணயத்தை சாப்பிட்டால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் செய்ய வேண்டிய முதலுதவிகள்.!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நமது இல்லங்களில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் யாரேனும் இருப்பின் அவர்கள் சில நேரத்தில் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறவினர்கள் வைத்துள்ள நாணயங்களை சில நேரங்களில் தெரியாமல் சாப்பிட்டு விடுவது வழக்கம்.
இந்த செயலை நாம் சிறு குழந்தையாக இருந்த போதும் செய்திருக்கலாம்., நமது பெற்றோர் அல்லது உறவினரை கேட்டால் தெரியும்., ஒரு நாணயத்தை சாப்பிட்டுவிட்டு நாம் செய்த அலப்பறை என்ன வென்று., அந்த வகையில் சிறு குழந்தைகள் நாணயத்தை சாப்பிட்டால் தொண்டையில் சிக்கும் அபாயமும்., சில நேரத்தில் மலம் கழிக்கும் சமயத்தில் வெளிவரும் நிகழ்வுகளும் நடைபெறும்.குழந்தைகள் நாணயத்தை உட்கொள்வதால் பேச முடியாத அல்லது மூச்சு விட சிரமமடைதல்., எச்சிலை வடித்து கொண்டே இருந்தால்., சத்தமாக இருமுதல்., சுய நினைவை இழப்பது மற்றும் தொடர் வாந்தி., வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதனை முடிந்தளவு சுய மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்துவதற்கு மலத்துடன் நாணயம் வெளியேறும் வரை காத்திருப்பது மட்டுமே சரியான நடவடிக்கையாக இருக்கும்., நாணயத்தை வெளிக்கொண்டு வர ஏதேனும் மருந்து வழங்குகிறேன் என்று கூறி எதனையும் வழங்கி தேவையற்ற இன்னலுக்கு உள்ளாக வேண்டாம். குழந்தைகள் நாணயத்தை உட்கொண்டு இருந்தால் பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் அல்லது இரண்டு நாட்களுக்குள் வெளியேறிவிடும்., மேற்கூறிய பிரச்சனைகளால் குழந்தை அவதியடைந்தால் கண்டிப்பாக தாமதிக்காமல் மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்ல வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு செய்யும் முதலுதவிகள் குறித்த தகவலை அறிந்து கொள்வது நல்லது.
அந்த வகையில்., குழந்தையை இந்த சமயத்தில் தானாக வாந்தி எடுப்பதை தவிர்த்து நீங்கலாக வாந்தி எடுக்க வைக்க முயற்சிக்க வேண்டாம்., உணவு மற்றும் தண்ணீரை கட்டாயம் வழங்கி உட்கொள்ள வற்புறுத்த வேண்டாம். குழந்தை மலம் கழித்த பின்னர் சுடுதண்ணீரை ஊற்றி நாணயம் வந்துவிட்டதா என்று சோதனை செய்ய வேண்டும்.
இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குவது நல்லது. மேலும் போதுமான அளவிற்கு நீரை வழங்கலாம். அவ்வாறு இரண்டு நாட்களுக்குள் நாணயம் வெளியேறாவிட்டால் மருத்துவமனைக்கு தாமதிக்கும் அழைத்து சென்று மருத்துவரிடம் விஷயத்தை கூறுங்கள். அவர் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையை செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews