விமானத்துறையில் டிப்ளமோ புதிய படிப்பு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2019

விமானத்துறையில் டிப்ளமோ புதிய படிப்பு அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பார்க் கல்வி குழுமம், மெட்ராஸ் பிளையிங் கிளப் அகாடமி இணைந்து, விமானத்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளை, கோவையில் அறிமுகம் செய்துள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, பார்க் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., அனுஷா மற்றும் மெட்ராஸ் பிளையிங் கிளப் கவுரவ செயலாளர் கேப்டன் ஜேக்கப் செல்வராஜ் பரிமாறிக்கொண்டனர்.
இது குறித்து, நிருபர்களிடம் பார்க் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., அனுஷா கூறியதாவது:இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், விமான ஓட்டுநர் உரிமம், டிப்ளமோ கேபின் க்ரு மேனேஜ்மென்ட், டிப்ளமோ அசிஸ்டென்ட் பிளைட் டிஸ்பாச்சர் ஆகிய படிப்புகள் வழங்கப்படவுள்ளன. விமானம் ஓட்டும் பயிற்சி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் வழங்கப்படும்.
இப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல் படித்து, குறைந்தபட்சம், 50 சதவீத தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விமானத்துறை படிப்புகள் மட்டுமல்லாமல், விமானம் ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றுத்தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews