👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
2019-20ஆம் நிதியாண்டு மாதச் சம்பளம் வாங்குவோருக்கு ஏராளமான வரிச் சலுகைகளை வாரி வழங்கும் ஆண்டாக மலர்ந்துள்ளது. எனவே மாதச் சம்பளதாரர்கள் இந்த நிதியாண்டில் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப நம் நிதித் திட்டத்தை செயல்படுத்தினால் வரும் ஆண்டை மனநிறைவுடன் கழிக்கலாம். கடந்த 2018-19ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு 2019-20ஆம் ஆண்டு மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் ஆண்டு என்றே சொல்லலாம்.
நீண்ட நாள் கோரிக்கைகளான வருமான வரி உச்சவரம்பு நீட்டிப்பு, நிரந்தர கழிவு, வீட்டு வாடகை வருமானத்திற்கு கூடுதல் வரிச் சலுகை போன்றவற்றுக்கு மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டில் அனுமதி கொடுத்துவிட்டார். நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் என்னவெல்லாம் விலை குறையும், அதனால் நமக்கு என்ன லாபம் என்பதை பார்க்கலாம். கூடவே விலை அதிகரிக்கும் பொருட்களையும் பார்க்கலாம். இந்தியாவில் 2012-2014 கால கட்டத்தில் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதால் 22 முதல் 50 வயதுடையவர்களின் காப்பீட்டுத் திட்டங்கள் மீதான ஆண்டு பிரீமியம் குறைக்கப்படும் தெரிகிறது. லோக்சபா தேர்தல் சலுகை நடப்பு நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை வாரி வழங்க முக்கிய காரணமே லோக்சபா தேர்தலை மனதில் வைத்துதான்.
தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் மாதச் சம்பளதாரர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கி உள்ளார். நிதியமைச்சரின் எண்ணம் பலிக்குமா இல்லையா என்பது வரும் மே மாத கடைசி வாரத்தில் தெரிந்துவிடும். வீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், மலிவு விலை வீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி 8 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகவும் குறைத்துள்ளனர்.
ஜிஎஸ்டியின் மாற்றப்பட்ட புதிய வரி விகிதம் முதல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் வீடுகள் மீதான விலை குறையும். வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.75 சதவிகிதம் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் 0.75 அல்லது 0.25 சதவிகிதம் என எவ்வளவு குறைத்தால் வீட்டுக் கடன், வாகன கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் குறைந்தால் வீட்டுக்கடனுக்கான மாதாந்திர இஎம்ஐ கணிசமாகக் குறையக்கூடும்.
ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் உள்ள வருமானத்திற்கு ரூ.13000 வருமான வரி செலுத்தி வந்தோம், நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் அந்த 13000 ரூபாய் மிச்சமாகும். காரணம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.13000 வரை மிச்சமாகும். நிரந்தர கழிவுத்தொகை ரூ.50000ஆக உயர்வு கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நிரந்தர கழிவுத்தொகை ரூ.40000 ஆக இருந்தது. நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் இது ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு இதனால் கூடுதலாக ரூ.10000 மிச்சமாகும். 2ஆவது வீட்டு வாடகைக்கு வரி கிடையாது கடந்த 2018-19ஆம் ஆண்டு வரையிலும் 2ஆவது வீட்டுக்கு வீட்டுக்கடன் இல்லாவிட்டாலும் வாடகைக்கு வரி செலுத்துவது கட்டாயமாக இருந்தது. நடப்பு 2019-20ஆம் ஆண்டில் 2ஆவது வீட்டுக்கு வீட்டுக்கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த வீட்டு வாடகைக்கு வரி செலுத்தவேண்டியது இல்லை என்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TDS உச்சவரம்பு ரூ.40000 ஆக உயர்வு கடந்த 2018-19ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்ததாரர்களுக்கான TDS உச்சவரம்பு ரூ.30000 ஆக இருந்தது. அது நடப்பு 2019-20ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.40000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒப்பந்ததாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். இரண்டாவது வீட்டுக்கும் மூலதன ஆதாய வரி விலக்கு கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மூலதன ஆதாய வரி விலக்கு பெற ஒரு வீட்டை விற்ற பணத்தில் மற்றொரு வீடு வாங்கினால் அதற்கு LTCG வரி விலக்கு உண்டு. அதுவே நடப்பு 2019-20ஆம் ஆண்டில் ஒரு வீட்டை விற்ற பணத்தில் இரண்டு வீடு வாங்கினாலும் அதற்கும் LTCG வரி விலக்கு உண்டு என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுக்கான பிரீமியம் குறைவு இந்தியாவில் 2012-2014 இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் 22 முதல் 50 வயதுடையவர்களின் காப்பீட்டுத் திட்டங்கள் மீதான பிரீமியம் குறைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. சுங்கவரி கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கவரிக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரையில் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் சுங்கவரிக் கட்டணம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயரும் என்பது அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சற்று அதிர்ச்சியான தகவல்தான். காகித பங்குகளை மாற்ற முடியாது தற்போது டீமேட் கணக்கு(Demat) மூலமாகவே அனைத்து பங்குகளையும் வாங்கவும் விற்கவும் முடிகிறது. இந்தியப் பங்குச் சந்தை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் யாராவது பிற்காலத்திற்கு தேவைப்படும் என்று வாங்கி பத்திரப்படுத்தி இருந்தால் அது கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் காகித வடிவில் உள்ள பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற முடியாது.
LTCGஐ வருமான வரி ரிட்டனில் தெரிவிப்பது கட்டாயம் மாதச் சம்பளதாரர்களும் தனி நபர் பிரிவில் வருவோரும் தங்களின் மாத வருமானத்தில் இருந்து செய்த முதலீடுகளையும் கட்டாயம் தங்களின் வருமான வரி ரிட்டனில் கட்டாயம் தெரிவிக்கவேண்டியது அவசியம் என்ற இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாதச்சம்பளதார்களும் தனிநபர் பிரிவில் வருவோரும் மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்களின் நிதித் திட்டங்களை மேற்கொண்டால் வரும் நாட்கள் வசந்தமாக மாறும்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்