👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதன்முறையாக கூகுள் ஜிமெயில் சேவையை தொடங்கியது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சேவையை முட்டாள்கள் தின வேடிக்கை நிகழ்வாக இன்றைய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருதியதாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத முடிவில் மாதந்தோறும் 1.5 பில்லியன் பயனாளர்களால் இந்த சேவை பயன்படுத்தபட்டு வருகின்றது. பால் புச்சீத் தலைமையில் கூகுள் மெயில் அல்லது ஜிமெயில் வெளியிடப்பட்டது.
கூகுள் ஜிமெயில் பிறந்த நாள் இன்று:
ஏப்ரல் 1, 2004-ல் முதன்முறையாக கூகுள் நிறுவனத்தில் பனிக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்து இன்றைய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை , ஜிமெயில் சேவை தொடங்கப்பட்டதை முட்டாள்கள் தின பகடி என்றே நினைத்ததாக cnet தளத்திற்கு அளித்த பேட்டியில் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த பிறகு குறிப்பிட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு கூகுள் மெயில் அல்லது ஜிமெயில் சேவை Paul Buchheit தலைமையில் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சோதனை ஓட்ட முறையில் அழைப்பவர்கள் மட்டும் ஜிமெயிலின் சேவையை பிப்ரவரி 7, 2007 முதல் பொது பயன்பாட்டிற்கு என அறிவிக்கப்பட்டது. தற்போது மாதந்தோறும் 1.5 பில்லியன் நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் யாகூ மெயில் 228 மில்லியன் மக்களால் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. அறிமுக காலத்தில் 1 ஜிபி அளவிற்கு மட்டும் இடவசதி வழங்கப்பட்ட நிலையில் இன்றைக்கு 15 ஜிபி வரை இலவச இடவசதி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவன லாரி பேஜ் ஒருமுறை Wierd தளத்துக்கு அளித்த பேட்டியில், ஜிமெயில் சேவை அறிமுகத்தின் பின்னரே கூகுள் தேடு பொறி என்பதனை கடந்து புதிய உயரத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. இன்றைக்கு கூகுள் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளே, ஸ்பேம் மின்னஞ்சல் தடுப்பு உட்பட, மிக நேர்த்தியான பல்வேறு வசதிகளை கொண்டதாக அமைதிருக்கின்றது.
தமிழ் உட்பட 39 மொழிகளில் இமெயில் சேவையை கூகுள் வழங்கி வருகின்றது. நாள்தோறும் கோடிக்கணக்கான ஸ்பேம் மெயில்களை இந்நிறுவனம் தனது Superior spam protection மூலம் தடுக்கின்றது. ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தின் பிளே ஸ்டோர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட 1 பில்லியன் மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட முதல் செயலி என்ற பெருமையை கூகுள் மெயில் பெற்றது. முதல் ஜிமெயில் முகப்பு தோற்ற படம் கூகுள் இன்றைக்கு கூகுள் மேப், ஆண்ட்ராய்டு, யூடியூப், செல்ஃப் டிரைவிங் கார் என பல்வேறு அம்சங்களை பெற்று மிகப்பெரிய டெக் நிறுவனமாக வலம் வருகின்றது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்