👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு, முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அம்மாணவி உயிரிழந்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 45-. இவரது, 11 வயது மகள் காவ்யா. இவர், மைலோடி பகுதியில் உள்ள, விக்டரி மெட்ரிக் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.முதலுதவிகடந்த, 4ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, பள்ளி வாகனத்தில், காவ்யா கிளம்பி சென்றார். அங்கு தேர்வு எழுதிய நிலையில், மதியம், 12:00 மணியளவில், காவ்யாவுக்கு வாந்தி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயார் ஜலஜாவுக்கு தகவல் கொடுத்தது.
அவர் பள்ளிக்கு வரும் வரை, காவ்யாவுக்கு, பள்ளி நிர்வாகம் எந்தவித முதலுதவியும் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.கிட்டத்தட்ட, 45 நிமிடங்களுக்கு பின், பள்ளிக்கு வந்த ஜலஜா, மயங்கிய நிலையில் இருந்த மகளை, நெய்யூரில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.பரிசோதித்த டாக்டர்கள், மாணவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, கால தாமதத்தால், மூளை நரம்பு பாதிப்படைந்து, ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.மேலும், காப்பாற்றுவது கடினம் எனக் கூறியதால், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மகளை, ஜலஜா அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி, 5ம் தேதி, காவ்யா உயிரிழந்தார்.
இரணியல் போலீசில், முருகன் அளித்துள்ள புகார்:என் மகள் மயக்கம் அடைந்த நிலையில், பள்ளி நிர்வாகம், முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதோடு, மனிதாபிமானம் அற்ற நிலையில், ஒரு அறையில் தனியே படுக்க வைத்துள்ளனர்.நடவடிக்கை மயங்கிய உடனே, பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை அளித்து இருந்தால், என் மகள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்புள்ளது.அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.இதே பள்ளியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாணவர் ஒருவர், தற்கொலை செய்த சம்பவத்தில், பள்ளி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்