👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
லோக்சபா தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு, கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில், நேற்று தொடங்கியது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உற்சாகத்துடன் ஓட்டளித்தனர். கோவை, பொள்ளாச்சி என இரு எம்.பி., தொகுதிகளை கொண்ட கோவை மாவட்டத்தில், தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பணிகளில், 14,724 அரசு, ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, மாவட்டத்தில், 10 மையங்களில் நேற்று நடந்தது. பயிற்சி முடிவில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு, தபால் ஓட்டுச்சீட்டுகள் அளிக்கப்பட்டன. 'எப்படி ஓட்டளிக்க வேண்டும்' என்பதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஓட்டுச்சீட்டுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் வழங்கப்பட்டன. அவற்றை பூர்த்தி செய்யும் முறையும் விளக்கப்பட்டது. எந்த வகை படிவத்தை எப்படி இணைக்க வேண்டும், ஓட்டுச்சீட்டு வைக்க வேண்டிய உறை, படிவங்கள் வைக்க வேண்டிய உறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நீண்ட வரிசைகளில் நின்று, ஓட்டுச்சீட்டுகளையும், படிவங்களையும் பெற்றுக்கொண்டனர். 'உடனடியாக ஓட்டளிக்க விரும்புவோர், இப்போதே ஓட்டளிக்கலாம்' என்றும் அறிவிக்கப்பட்டது.
தபால் ஓட்டு அளிப்போர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் கையொப்பம் பெற்று அளிக்க வேண்டும். இதற்கென அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களும், பயிற்சி மையத்தில் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள், தபால் ஓட்டளிக்க வந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, சான்றொப்பம் இட்டு வழங்கினர். அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம், சான்றொப்பமும் பெற்ற தேர்தல் பணியாளர்கள், தபால் ஓட்டளிப்பதற்கான தனியறையில் சென்று ஓட்டளித்தனர். இதற்கென, ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதன்பின் ஓட்டுச்சீட்டை, உரிய உறையில் இட்டு, 'சீல்' வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டியில் சேர்ப்பித்தனர். கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 10 மையங்களிலும் சேர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் தபால் ஓட்டுக்களை செலுத்தி, ஓட்டுப்பெட்டியில் சேர்த்தனர். தபால் ஓட்டு செலுத்துவதற்கான 'சீல்' வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் வைக்கப்படும். அந்த பெட்டியிலும், அலுவலர்கள், தபால் ஓட்டுச்சீட்டு உறைகளை சேர்ப்பிக்கலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்