👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
எம்.பி.பி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 36% இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதே போல தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கும் இளநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு 64% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பில் பணியில் உள்ள இளநிலை அரசு மருத்துவர்களுக்கு வெறும் 36% இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்க நடத்தப்படுகிறது.
இதில் எம்.பி.பி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 36% இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதே போல தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கும் இளநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு 64% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை தொடங்கிய கலந்தாய்வில் மொத்தம் 290 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் 112 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கும் 178 இடங்கள் தனியார் மருத்துவர்களுக்கும் கிடைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்விலும் மொத்தம் நிரப்பப்பட்ட 422 இடங்களில் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 145 இடங்களே கிடைத்தன. மீதி 277 இடங்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கே கொடுக்கப்பட்டன.
முன்பு, அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் இளநிலை மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் மருத்துவ கல்வி விதிமுறைகள் (2000) மூலம் தமிழக அரசின் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கிராமப் பகுதிகளிலும் வேறு கடினமான இடங்களிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதை அறிமுகம் செய்தது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்