👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மக்களவைத் தேர்தல் மற்ரும் பிரத்யேகமாக சட்டமன்ற இடைத் தேர்தல் என தமிழகம் தனித் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் மும்முரமாக தன் வாக்குச் சாவடிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 17 ஆண்டுகள் கழித்து மின்சாரம் பெறும் பள்ளி பற்றி படித்தீர்களா..? குறிப்பாக இந்த 2019 மக்களவைத் தேர்தலினால் இந்த அரசுப் பள்ளிக்கு மின்சாரம் கிடைத்தது எப்படி எனத் தெரியுமா..?
பள்ளி: கோவை மாவட்டத்தில் தூமனூர், செம்புக்கரை, காட்டு சாலை போன்ற கிராமத்து மாணவர்கள் படிக்க இருக்கும் ஒரே பள்ளி இந்த தூமனூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி தான். இங்கு தான் இந்த கிராம மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை சுமார் 50 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
அவர்கள் பள்ளி: இந்த பள்ளியை 2002-ம் ஆண்டு தொடங்கினார்கள். ஆனால் அன்றில் இருந்து இன்று வரை இந்த பள்ளிக்கு தண்ணீர் வசதிகளோ (ஒரே ஒரு போர்வெல்லைத் தவிர) மின்சார வசதிகளோ செய்து கொடுக்கவில்லை.
சூரிய ஒளி இல்லை:
சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் முதலில் மாணவர்களில் குடிநீர் தேவைக்காக ஆர்ஓ இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படுமாம். அது போக மீதமுள்ள மின்சாரத்தை தான் வகுப்பறைகளில் இருக்கும் விலக்குகளுக்கு பயன்படுத்துவார்களாம். இந்த இரண்டுக்குமே நல்ல வெயில் காலங்களில் சோலார் பேனல்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தீர்ந்துவிடுமாம்.
பருவமழை காலங்களில்:
பொதுவாகவே தூமனூர் பகுதிகளில் நல்ல மலை பெய்யுமாம். அப்படி மழை பெய்யும் போது ஆர்ஓ இயந்திரத்துக்கே சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கும் மொத்த மின்சாரமும் தீர்ந்து விடுமாம். அப்போது எல்லாம் இருட்டில் தான் வகுப்பு நடக்குமாம்.என்னாச்சு: இந்த அரசுப் பள்ளிக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதில் மீட்டர் பொருத்துவது, வொயரிங் செய்வது போன்ற சில சின்ன சின்ன பிரச்னையில் 2002-ல் இருந்து கிடப்பில் தான் கிடந்ததாம். இப்போது இந்த தூமனூர் பள்ளிக் கூடமும் ஒர் வாக்குச் சாவடியாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
மகிழ்ச்சி:
தேர்தல் ஆணையத்தால் எப்போது இந்தப் பள்ளி வாக்குச் சாவடிகளாக அறிவிக்கப்பட்டதோ அப்போதே தமிழக மின்சார வாரியத்தில் இருந்து ஆட்கள் வந்து தேவையான எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்துவிட்டார்களாம். இப்போது இந்த பள்ளியில் நிம்மதியாக மின்சார விளக்குகளோடு பாடம் நடத்த முடியும், படிக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள். கூடுதலாக தூமனூர் கிராமவாசிகளில் பலரின் வீடுகளில் இன்னும் கூட மின்சார வசதிகள் இல்லையாம். அப்படி சிரமப்படும் மாணவர்கள் இனி பள்ளியிலேயே தங்கி படித்துவிட்டுச் செல்லலாம் எனவும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.
மோடிக்கு கேள்வி:
மோடிஜி சமீபத்தில் தான் தன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் எல்ல கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்துவிட்டேன், இந்தியாவில் மின்சாரம் பயன் பெறாத நபர்களே இல்லை என்கிற ரீதியில் பேசி வந்தார். ஆனால் இங்கு ஒரு கிராமத்துக்கே மின்சாரம் இல்லாமல் மோடியின் கடந்த 5 ஆண்டு காலங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்திருக்கிறார்கள். இத்கற்கு மோடி என்ன பதில் சொல்லப் போகிறார் என சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்