உயர்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

உயர்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனை கூறும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாணவர்களின் உயர்கல்வி சந்தேகங்களுக்கு, விளக்கம் பெறலாம்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளில் சேர்வதற்கு உதவும் வகையில், நமது நாளிதழ் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆலோசனை இந்த ஆண்டு, நமது நாளிதழுடன்,எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்த உள்ளது.சென்னை, சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள, கலைவாணர் அரங்கில், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை, வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.இதில், உயர்கல்வி தொடர்பாக, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆலோசனை வழங்க உள்ளனர். விண்வெளி அறிவியல் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்ட உள்ளார்.இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், வணிகவியல், பொருளியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து, விரிவான தகவல்கள் வழங்கப்படும்.உயர்கல்வி வகைகள், &'நீட்&' தேர்வு, சி.ஏ., - ஐ.சி.டபுள்யூ.ஏ., - ஏ.சி.எஸ்., உட்பட, தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை அணுகும் முறை, வேலை வாய்ப்புகள் மற்றும் கல்விக்கடன் குறித்து, அனுபவம் மிக்க பேராசிரியர்களும், துறை சார் நிபுணர்களும், விளக்கம் தர உள்ளனர். அரங்குகள் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ரொபாட்டிக் தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தகவல் தொகுப்பு தொழில்நுட்பம் போன்றவை குறித்து, தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்வேறு முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்களின் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கல்வி நிறுவனங்களில் உள்ள பாடங்கள், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் போன்றவை குறித்து, மாணவர்கள், பெற்றோருக்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள், விளக்கம் அளிக்க உள்ளனர்.
இணைந்து வழங்கும் நிறுவனங்கள்! &'தினமலர்&' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகிறது. &'ஸ்பான்சர்&'களாக, கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. &'வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, இந்துஸ்தான் குழும கல்வி நிறுவனங்கள், ஆவடி, செயின்ட் பீட்டர்ஸ் குழும கல்வி நிறுவனங்கள், எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லுாரி, ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்கள், செயின்ட் ஜான்ஸ் எஜுகேர் ஆகியன, நிகழ்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
பதில் சொல்லுங்கள்; பரிசை அள்ளுங்கள் காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கும். இதில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை. மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு, உளவியல் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும். உயர்கல்வி தகவல்கள் அடங்கிய, &'தினமலர்&' வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்க நிகழ்வுகளில், மாணவர்களிடம் பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் கூறுவோருக்கு, &'டேப்&' கையடக்க கணினி மற்றும் கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews