மதுரை காமராஜ் பல்கலையில் 5406 தணிக்கை தடைகள்; தீர்வு காண வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 30, 2019

மதுரை காமராஜ் பல்கலையில் 5406 தணிக்கை தடைகள்; தீர்வு காண வலியுறுத்தல்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

மதுரை காமராஜ் பல்கலையில் நிலுவையில் உள்ள 5406 தணிக்கை தடைகளுக்கு சிறப்பு குழு அமைத்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என செனட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பல்கலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. பதிவாளர் சின்னையா முன்னிலை வகித்தார்.புதிய செனட் உறுப்பினர்களாக சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், ஷகிலா, பாரிபரமேஸ்வரன் உட்பட 18 பேரை துணைவேந்தர் அறிமுகம் செய்தார். இதன் பின் நடந்த விவாதம் விவரம்:

நேரு, கல்லுாரி முதல்வர்: உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லுாரி களில் முதல்வர் ஓய்வு பெறும் வயது என்ன? இதுதொடர்பாக பல்கலை விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
நல்லகாமன், டீன்: இதுதொடர்பாக அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
கண்ணன், கல்லுாரி முதல்வர்: அதுபோன்ற உத்தரவுகள் அனுப்பப்படவில்லை. (இதுதொடர்பாக இருவருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. துணைவேந்தர் சமரசம் செய்தார்)
தீனதயாளன்: முதல்வர் ஓய்வு வயது 62. சில கல்லுாரிகளில் இந்த வயதை தாண்டி சிலர் முதல்வராக தொடர்வதாக தெரிந்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும்.
நல்லகாமன்: உறுப்புகல்லுாரிகளில் சமூக அறிவியல் பிரிவு துவங்க வேண்டும். டிகிரி முடிக்கும் பலருக்கு இது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும். டிகிரியுடன் கூடுதல் திறனுக்கான டிப்ளமோ படிப்பும் நடத்த வேண்டும்.
துணைவேந்தர்: நல்ல ஆலோசனை. வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.
நேரு மற்றும் கண்ணன்: புதுமையான படிப்புகள் துவங்கினால் அதற்கான இணையான சான்றிதழ் கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படுகிறது.

தீனதயாளன்: இணையான சான்றிதழ் இல்லாத பல படிப்புக்களை டி.என்.பி.எஸ்.சி., போன்ற அமைப்புகள் வேலைவாய்ப்பின் போது ஏற்பதில்லை. புதிய படிப்பு துவங்கும்போது சம்பந்தப்பட்ட பழைய பாடத்திட்டத்தில் 75 சதவீதத்தை புதிய பாடத்தில் சேர்த்தால் பல்கலையே இணையான சான்றிதழ் வழங்க முடியும்.
துணைவேந்தர்: இப்பிரச்னைகள் குறித்து யு.ஜி.சி., கவனத்திற்கும், உயர்கல்வி கவுன்சில் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர் ஆர்.லட்சுமிபதி: பல்கலை, கல்லுாரிகளில் உள்ள படிப்புகள் மாணவர் படித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
செல்வம், பேராசிரியர்: பல்கலையில் எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு பணிகளில் நியமிக்கப்பட்ட 10 நியமனங்கள் குறித்து பல ஆண்டுகளாக தணிக்கை தடைகள் தொடர்கின்றன.
முத்துமாணிக்கம், பேராசிரியர்: பல்வேறு நிலைகளில் 5406 தணிக்கை தடைகள் நிலுவையில் உள்ளன. இதன் மூலம் 528 கோடி ரூபாய் வரை சம்பளம் உள்ளிட்ட பணப் பலன் திரும்ப வசூலிக்க வேண்டிஉள்ளது

துணைவேந்தர்: தணிக்கை தடைகளை ஒவ்வொரு ஆண்டும் ஏன் தீர்க்கவில்லை. அது எவ்வாறு தொடர அனுமதிக்கப்படுகிறது. &'ஜாயின்ட் சிட்டிங்&' மூலம் தணிக்கை தடைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
தீனதயாளன்: இதற்காக சிறப்பு குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்.
பாரிபரமேஸ்ரன்: சிறப்பு குழு விசாரணைக்கு கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும்.நேரு: 2006க்கு முன் பிஎச்.டி., பதிவு செய்த எம்.பில்., தகுதியுள்ளோருக்கு இரண்டு ஆண்டில் &'தீசிஸ்&' சமர்ப்பிக்க பரிசீலிக்க வேண்டும்.
துணைவேந்தர்: யு.ஜி.சி., விதிப்படி மூன்று ஆண்டுகள் முடிந்த பின் தான் &'தீசிஸ்&' சமர்ப்பிக்க முடியும். அதற்கு முன் சமர்ப்பித்தால் பயனில்லை.
ராமகிருஷ்ணன்: யு.ஜி.சி., 2009 வழிகாட்டுதல்படி தற்போது மூன்று ஆண்டுக்குள் &'கோர்ஸ் ஒர்க்&' என்ற கூடுதல் தகுதி நிறைவு செய்ய வேண்டும். அதன் பின் தான் பிஎச்.டி., முடிக்க முடியும்.

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews