Breaking

Sunday, March 24, 2019

பலப்பரீட்சை! மேலும் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு: அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம்; ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தி.மு.க., வியூகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், மேலும், நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில், எப்படியும் அதிக இடங் களை பிடிக்க, அ.தி.மு.க., திட்டமிட்டு உள்ளது. அதேநேரம், இந்த வாய்ப்பை பயன் படுத்தி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வும் வியூகம் வகுத்துள்ளது. பலப்பரீட்சை, தொகுதி, இடைத்தேர்தல், அ.தி.மு.க., ஆட்சி மாற்றம், தி.மு.க., வியூகம் தமிழகத்தில், 39லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், ஏப்., 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம்,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆகிய, 3தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணமாக, தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதை, ஆணையம் சுட்டிக்காட்டியது. மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி, எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை, தேர்தல் ஆணையத்துக்கும், உச்ச நீதிமன்றத் துக்கும், தி.மு.க., எடுத்து சென்றது. தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முடிவுக்கு வந்து விட்டது இந்நிலையில், இரண்டு தொகுதிகள் தொடர் பான தேர்தல் வழக்கு, உயர் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில்,அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்து, டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்திருந்தார். மனுவை வாபஸ் பெற்றதால், வழக்கை தள்ளுபடி செய்து, நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தர விட்டார்.நீதிமன்ற உத்தரவை, உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கும், நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த தாக, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கும், முடிவுக்கு வந்து விட்டது. அதில், 'அ.தி.மு.க., வேட்பாளர், ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது' என, நீதிபதி வேல்முருகன்உத்தரவிட்டார். தற்போதைய நிலையில், மூன்றில், இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் வழக்கு, முடிவுக்கு வந்து விட்டது. அரவக்குறிச்சி தேர்தலை எதிர்த்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தும், இந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த, எந்த தடையும் இல்லை என, கூறப்படுகிறது.
தடையில்லை மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் கூறியதாவது:ஒரு தொகுதி காலியாகி, ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஓராண்டுக்குள், பொதுத்தேர்தல் வருவதாக இருந்தால், இடைத் தேர்தல் நடத்த வேண்டியதில்லை.முக்கிய காரணங்கள் ஏதும் இருந்தால், தேர்தல் தள்ளிப் போகலாம். மற்றபடி, இடைத்தேர்தலை தள்ளிவைக்க முடியாது. தற்போது, இரண்டு தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கில், தீர்ப்பு வந்து விட்டது. அரவக்குறிச்சி தேர்தல் வழக்கைப் பொறுத்தவரை,தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி, வழக்கு தொடுத்தவர் கோரவில்லை. எனவே, மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை.இவ்வாறு, அவர் கூறினார். மூன்று தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற் றங்கள் குறித்து, உச்சநீதிமன்றத்தில், தி.மு.க., தரப் பில் விரைவில் முறையிடப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. மூன்று தொகுதிகளுடன், நான்காவதாக, சூலுார் தொகுதியும் காலியாகி உள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் வருகிறது. லோக்சபா தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்., 18ல் நடந்தாலும், மே, 23ம் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதனால், ஓட்டு எண்ணிக்கைக்கு முன், நான்கு தொகுதிகளுக் கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்து கின்றன. அதை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் ஆணையமும் உள்ளது. 'மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்!
'''இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ள, நான்கு தொகுதிகளில், மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த, தடை இல்லை என்ற தகவல், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:'எம்.எல்.ஏ., மறைவு காரணமாக, சூலுார் சட்டசபை தொகுதி, காலியாக உள்ளது' என, சட்டசபை செயலர் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதம், டில்லி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, ஒட்டபிடாரம் தொகுதி வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்விபரமும், டில்லிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில், நேற்று முன்தினம், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதன் விபரமும், டில்லிக்கு தெரிவிக்கப்படும்.அரவக்குறிச்சி தொகுதி வழக்கு, இன்னமும் நிறைவு பெறவில்லை. தற்போதைய நிலையில், சூலுார், ஒட்டப் பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், தேர்தல் நடத்த தடை இல்லை. எப்போது நடத்துவது என்பதை, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog