45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணிநியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரைதமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலானTET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுதஅனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில்குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டுONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால்இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர்50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதியவிதிமுறை வகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்டமாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளைமுன்வைக்கிறோம். கோரிக்கைகள் 1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்தபட்ச மதிப்பெண்கள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேரமுடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்றுTET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கெனதனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பதுசரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது.
2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்றுB.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரைபெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுதமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப்படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. 3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டகல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும்.
கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணிநியமனமும் பெற்றுள்ளனர். 4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் பயின்றுவருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள்எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பதுமுரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வுவாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம்பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுதஅனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்றபல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். எனவே தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர் தேர்வு வாரியமும் B.ED பட்டம் பெற்ற அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதித்துஉடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டஆசிரியர்களுள் ஒருவர் .
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews