உலக வரலாற்றில் இன்று - மார்ச் 31 (March 31) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

உலக வரலாற்றில் இன்று - மார்ச் 31 (March 31)


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

நிகழ்வுகள்
627 – அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார்.
1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 – ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 – ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1931 – அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1949 – நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.
1951 – யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
1964 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
1991 – ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
பிறப்புகள்
1504 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552)
1596 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650)
1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)
1732 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809)
1865 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (இ. 1887)
1884 – அதிரியான் வான் மானன், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1946)
1890 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1971)
1898 – சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
1908 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர் (இ. 2000)
1912 – ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர், இலங்கை அரசியல்வாதி
1914 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (இ. 1998)
1928 – இராம. அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி
1934 – கமலா தாஸ், மலையாள கவிஞர் (இ. 2009)
1938 – சீலா தீக்‌சித், கேரளத்தின் 22வது ஆளுநர்
1948 – ஆல் கோர், அமெரிக்காவின் 45வது துணை அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
1950 – ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர்
1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1751 – பிரெடரிக், வேல்சு இளவரசர் (பி. 1707
1861 – என்றி மார்ட்டின், ஈழத் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் போதகர்
1917 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1854)
1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904)
1972 – மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932)
1980 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தடகள வீரர் (பி. 1913)
1981 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
1995 – செலெனா, அமெரிக்கப் பாடகி (பி. 1971)
1997 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (மால்ட்டா)

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews