10, 12-வது முடித்த மாணவர்களே நீங்க இந்த ராசிக்காரரா? அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 22, 2019

10, 12-வது முடித்த மாணவர்களே நீங்க இந்த ராசிக்காரரா? அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459


10, 12-வது தேர்வில் தங்களது குழந்தைகள் தேர்ச்சி பெற்றுவிட்டலே பெற்றோர்களை கையில் பிடிக்க முடியாது. குழந்தைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்று உறவினர் தொடங்கி அக்கம் பக்கம் என ஒரு பூகம்பமே வந்துவிடும். எந்தத் துறையில் அவர்களை ஈடுபடச் செய்வது? அவர்களுக்கு அந்தத் துறை சிறப்பாக அமையுமா? என்று நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கு அளவே இருக்காது.
ஒருவர் படித்தது ஒன்றாக இருக்கும், பார்க்கின்ற வேலை ஒன்றாக இருக்கும். இதைத் தவிர்க்க அவரவர் ராசிக்குரிய படிப்புகளைத் தேர்வு செய்து படித்தால் நிச்சய வெற்றி கிடைக்கும் என்கிறது ஜோதிடத்தரப்பு. இதில், சரியான முடிவெடுத்தவர்களும் உண்டு. சரி வாருங்கள், இந்த வருடம் எந்த ராசியுடையோருக்கு எந்த படிப்பு ஏற்றது என பார்க்கலாம்.
மேஷம்
ராணுவம், அறுவை சிகிச்சை மருத்துவர், ரத்தப்பிரிவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடப்பணி, அறுவை சிகிச்சைக்குரிய கருவிகள் தயாரிப்பு, காவல் துறை, சிவில் என்ஜினீயரிங், பொதுச் சேவை போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை.

ரிஷபம்
கலைத்துறையான சினிமா, இசைத்துறை, நடிப்பு, இயக்குனர், படத் தயாரிப்பாளர், புகைப் படக் கலை, அழங்கார வடிவமைப்பு, சின்னத் திரை, உடை அழங்காரம், அழகு நிலையம் நடத்துபவர் மற்றும் கணினித் துறை போன்ற துறைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களைப் பொருத்தவரையில், பத்திரிகைத் துறை, நானோ டெக்னாலஜி, விவசாயத் துறை, ஜோதிடம், பேச்சாளர், வழக்கறிஞர், இலக்கியத் துறை, அக்கௌண்டண்ட், ஆடிட்டர், இசைக்கருவிகளை இயக்குதல், பாடல் கற்றல், பைலட், நடனம் கற்றல், கதை, கட்டுரைப் படைப்பு, தரகர், கமிஷன் மற்றும் ஏஜென்ட் துறை, வாங்கி விற்கும் டிஸ்ரிபூட்டர்ஸ், மார்க்கெட்டிங், கணினிப் பொறியாளர், ஊடகத்துறை சரியானதாகும்.

கடகம்
நீர் சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்கலாம். உதாரணமாக பால், எண்ணெய், பெட்ரோல் பங்க், குளிர்பானம் விவசாயம், நீராவி இயந்திரத்தில் பணிபுரிதல், கடல் பொருட்கள், சங்குப் பொருட்கள், மீன் உணவகம், மெரைன் தொழில்நுட்பம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

சிம்மம்
அரசுத் துறை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். அலுவலக கிளார்க் தொடங்கி அதிகாரி வரை உள்ள பணிகள் சிம்ம ராசிக் காரர்களுக்கு அசால்ட்டாக கிடைத்துவிடும். மருத்துவர், சமூகச் சேவை உள்ளிட்ட துறைகளிலும் தாராளமாக படித்து வெற்றி கான முடியும்.

கன்னி
சித்த மருத்துவம், கணக்குத் துறை, சிஏ, இசை, நடனம், நாடகத்துறை, எடிட்டிங், போட்டோகிராபி, பத்திரிகைத் துறை, வழக்கறிஞர், இலக்கியத் துறை, கதை, கட்டுரை எழுதுவது, அயல்நாட்டுத் தூதர், மார்க்கெட்டிங் துறை, வாங்கி விற்பது, ஏஜென்ட், கணினிப் பொறியியல் உள்ளிட்டவை கன்னி ராசிக்கு ஏற்றதாகும்.

துலாம்
கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், மிருதங்கம், நாதஸ்வரம், நட்டுவாங்கம், இசை அமைப்பது, சவுண்ட் இன்ஜினீயரிங், ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், பைலட் சினிமா இயக்குனர், பிலிம் டெக்னாலஜி, சினிமோடோகிராபி உள்ளிட்டவற்றை தாராளமாக படிக்கலாம்.

விருச்சிகம்
மருத்துவத் துறை, மருந்து தயாரிப்பு, உயிர் வேதிப்பொருட்களைப் பற்றிய பார்மாசூட்டிகல் பொறியியல், லேப் டெக்னிசியன்ஸ் துறை போன்றவை விருச்சிகத்திற்கு ஏற்றதாகும். அதனைத் தவிர்த்து அஞ்சல் துறை, காவல் துறை போன்றவற்றிலும் நீங்கள் கலக்கலாம்.

தனுசு
ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்ற மனநிலை எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். இதனால், ஆசிரியர், பேராசிரியர் போன்றவற்றிலும், வங்கிப் பணி போன்றஅரசு வேலைகளிலும் அதிக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மகரம்
நிலம் சார்ந்த துறைகளில் பட்டப் பப்புகள் மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை வண்ணமயமானதாக மாற்ற முடியும். குறிப்பாக, பொறியியல், வான்வெளி துறை, தாது தொடர்பான துறைகளை தேர்வு செய்யலாம்.

கும்பம்
பி.டெக் போன்ற மேற்படிப்புகள் உங்களது எதிர்காலத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். தொல்பொருள் ஆராய்ச்சி, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங், பி.எஸ்சி விவசாயம், போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

மீனம்

பி.ஏ தொடங்கி பி.காம், பிஎஸ்சி என எந்தத் துறையினை நீங்கள் தேர்வு செய்தாலும் அதில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். குறிப்பாக ஊடகத் துறையில் அதிகம் நாட்டம் கொண்ட நீங்கள் உடங்களது இளங்களைப் பட்டப் படிப்பிலேயே அதனை தேர்வு செய்து படிப்பது ஏற்றது. விசுவல் கம்யூனிகேஷன், ஜர்னலிஷம் (ஊடகவியல்) போன்றவற்றை குறிப்பிடலாம்.


மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews