Breaking

Monday, February 11, 2019

பனியால் சாலைகள் மூடல் : மாணவர்களுக்கு தனி விமானம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
காஷ்மீர் மாநிலத்தில், கடுமையான பனிப் பொழிவு நிலவுவதால், இந்திய விமானப் படை ஏற்பாடு செய்த தனி விமானத்தில், 319 மாணவர்கள், ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு அழைத்து வரப்பட்டு, இன்ஜினியரிங் தேர்வு எழுதினர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், சமீபகாலமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தரையிலும், சாலைகளிலும், பல அடி உயரத்திற்கு பனி உறைந்திருப்பதால், சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. உறை பனி காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, இந்திய விமானப் படை சார்பில், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில், ஜம்மு - ஸ்ரீநகர் இடையே தனி விமானம் இயக்கப்பட்டது.
இதில், 'பொறியியல் பட்டதாரிகளுக்கான திறனறியும் தேர்வு' எனப்படும், 'கேட்' தேர்வு, நேற்று, ஜம்முவில் நடந்தது. ஸ்ரீநகரைச் சேர்ந்த, 319 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருந்தது. இவர்கள், தனி விமானம் மூலம், நேற்று ஜம்மு அழைத்து வரப்பட்டு, தேர்வு எழுதினர். பின், மீண்டும் விமானத்தில் ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பனிப்பொழிவு காரணமாக, சாலை போக்குவரத்து முடங்கியிருந்த நிலையில், இந்திய விமானப் படையின் இந்த மனிதாபிமான நடவடிக்கை காரணமாக, மாணவர்கள் எளிதாக தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த பொதுமக்களும் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog