காமராஜ் பல்கலை பெயர் மாற்றம் : அரசுக்கு ஐகோர்ட் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

காமராஜ் பல்கலை பெயர் மாற்றம் : அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை காமராஜ் பல்கலை என்பதை, காமராஜர் பல்கலை, மதுரை என பெயர் மாற்றம் செய்யும் சாத்தியக்கூறு பற்றி, தமிழக அரசு தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
உடுமலைப்பேட்டை முத்துசுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலை, 1978 வரை, மதுரை பல்கலை என, அழைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர், காமராஜரை கவுரவிக்கும் வகையில், பல்கலைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அவர் விருதுநகரைச் சேர்ந்தவர். இலக்கண முறைப்படி, தமிழில், மதுரைக் காமராஜர் பல்கலை என, பெயர் பலகையில் இடம் பெற வேண்டும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலை என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், மதுரை காமராஜ் பல்கலை என உள்ளது. அதற்கு பதிலாக, ஆங்கிலத்தில், மதுரை காமராஜர் பல்கலை, தமிழில், மதுரைக் காமராஜர் பல்கலை என பெயர் பலகையில் இடம் பெற, அரசு மற்றும் பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.
நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு உத்தரவு: பெரியார், பாரதியார், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை என அழைக்கப்படுகிறது. ஊர்களின் பெயர்களால் அழைக்கப்படுவதில்லை.மதுரை காமராஜர் பல்கலை என அழைப்பது, அவர் மதுரையில் வாழ்ந்தது போல் அடையாளப்படுத்துவது மற்றும் பொருள் கொள்ளும் வகையில் உள்ளது. எனவே, காமராஜர் பல்கலை, மதுரை என பெயர் மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறு பற்றி, உயர்கல்வித் துறை செயலர், துணைவேந்தர் தரப்பில் விளக்கம் பெற்று, அரசு வழக்கறிஞர், இரண்டு வாரங்களில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews