அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியில் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியில் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மிதவை தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரிகளை கண்டறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கி ஆராய்ச்சி செயல் திட்டத்தின் கீழ் ஒரு நாள் ஆராய்ச்சி பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.பயிற்சியின் ஒரு பகுதியாக ஆராய்ச்சி மாணவர்கள் வனத் துறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பள்ளி பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் களப்பயணத்தை துவக்கி வைத்தார்.
சென்னை, நந்தனம் அரசு கல்லுாரியின் தாவரவியல் துறை தலைவர் முஜிராம் மற்றும் தாவரவியல் ஆசிரியர் சரசுவதி ஆகியோர் மாணவர்களுக்கு தாவரங்களையும், பூச்சிகளையும் அடையாளம் காணுதல், அவற்றின் வளர்ச்சி, அவற்றை மாதிரிகளாக மடிப்பு நுண்ணோக்கியில் காணும் முறை குறித்து பயிற்சி அளித்தனர். ஆசிரியர் செல்வகணபதி பல்வேறு மரங்களின் இயல்புகளை விவரித்தார். மடிப்பு நுண்ணோக்கியின் முதன்மை ஆராய்ச்சியாளர் அரவிந்தராஜா புதுச்சேரி நீர்நிலைகளில் உள்ள தாவர மற்றும் மிதவை நுண்ணுயிரிகளை பிளான்க்டன் வலைகள் எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு செய்யும் பயிற்சி அளித்தனர். மாதிரிகளை சேகரித்து அதிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கண்டறியும் முறையும் கற்றுக்கொடுக்கப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின் மாணவர்கள் தாங்கள் சேகரித்த ைஹடிரில்லா, அசோலா ஆகிய தாவரங்களை குளத்தில் விட்டனர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews