👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
எழுத்தின் அளவு :
Print Email
வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களில் 30 பேர் நாடு திரும்பினர்.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக அந்நாட்டில் &'எப் 1&' விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் அங்கேயே பணி புரிவதற்காக பணி விசா பெற வேண்டும். இதில் பல முறைகேடுகள் நடப்பதால், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிய மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக் கழகத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்படுத்தியது.
இதை அறியாமல் இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவில் தங்க வைக்க இப்பல்கலையை நாடியுள்ளனர். விசா முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இப்பல்கலையில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். இவர்களில் 129 பேர் இந்தியர்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து, 129 பேரையும் விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தது. இந்திய மாணவர்கள் தெரிந்தே இத்தவறை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் எந்த நடவடிக்கையும் இன்றி இந்தியா திரும்பியுள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்