👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்...

தமிழக பட்ஜெட் 2019-20 : உயர்கல்வித் துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் உயர்கல்வித் துறையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :
* அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* 5 மாவட்ட தலைநகரங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்படும்
* தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* முதல் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி ஒதுக்கீடு
* அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி நல்கைத் தொகை வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்
2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் - துணை முதலமைச்சர்
* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்
பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு
மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு - துணை முதலமைச்சர்
* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்
* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை - துணை முதலமைச்சர்
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்;
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்
தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு
மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு
* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி
* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு
* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி
* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு
* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்
* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்
* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்
* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்
* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி
அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு
* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது
* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்
* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்
* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்ேபடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி
* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்
* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்
* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்