👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறையும், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்;
* விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்
* தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு
* மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு
* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி
* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு
* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி
* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு
* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்
* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்
* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்
* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்
* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்