ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 16, 2019

ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்க மறந்த பொறியியல் துறையைச் சார்ந்த பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும். மொத்த காலியிடங்கள்: 60 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant System Engineer காலியிடங்கள்: 36 பணி: Assistant System Analyst காலியிடங்கள்: 24 சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 தகுதி: பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி,எம்பிசி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 35 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுக் கட்டணம்: ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளை பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 22.02.2019 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2019
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews