பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பைக், காரில் வர தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பைக், காரில் வர தடை

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பைக், காரில் வர தடை மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு இனி இருசக்கர வாகனம் மற்றும் காரில் வர தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர் இவர்களின் வாகனங்களை நிறுத்த கல்லூரி நிர்வாகம் தனி இடம் வழங்கியுள்ளது. சில மாணவர்கள் கார்களில் வருகின்றனர்
சில மாணவர்கள் சரியாக ஓட்டத் தெரியாமல் வாகனங்களை எடுத்து வருகின்றனர். இவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது இதை தவிர்க்கும் வகையில் கல்வித்துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு இனி இருசக்கர வாகனம் மற்றும் காரில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுகின்றனர் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கருதி கல்வித்துறை இந்த முடிவு எடுத்துள்ளது
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி.தேவேகவுடா கூறுகையில், ‘‘கல்லூரிக்கு கார், இருசக்கர வாகனங்களை கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவை மாணவர்களிடம் உடனடியாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் இதுபற்றி பல்கலை. துணை வேந்தர்கள், தனியார் கல்வி நிறுவனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி நிறுவனத் தலைவர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்’’ என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews