வனத்துறை பணியாளர் தேர்வு: நாளை இலவச பயிற்சி துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

வனத்துறை பணியாளர் தேர்வு: நாளை இலவச பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம், வனத்துறைத்துறையில் காலியாக உள்ள, 726 வனக்காவலர் மற்றும் 152 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் என, மொத்தம், 878 காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம், தேர்வு நடத்தப்பட உள்ளது
விண்ணப்பம் செய்தவர்கள் பயனடையும் வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், நாளை (நவ., 12) முதல், பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இலவச பாடக்குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும்
மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும். விண்ணப்பித்துள்ள இளைஞர்கள், உரிய ஆவணங்களுடன், நேரில் வந்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews