உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 22 (November 22 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 22 (November 22 )




நவம்பர் 22 (November 22 ) கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினது சொத்துக்களை பறிமுதல் செய்ய
திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.
1635 – சீனக் குடியரசின் டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில் , பிரித்தானிய கடல்கொள்ளைக்காரன்
பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.

1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன்
அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.
1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய
பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில்
சைனா கிளிப்பர் என்ற விமானம்
கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன்
மணிலாவை அடைந்தது.)
1940 – இரண்டாம் உலகப் போர் :
இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள்
அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர் :
செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ் , ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக
இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943 – இரண்டாம் உலகப் போர் : அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் , பிரித்தானியப் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.

1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963 – அமெரிக்க அரசுத்தலைவர்
ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து
எசுப்பானியாவின் அரசராக
யுவான் கார்லொசு
எசுப்பானியாவின் அரசரானார்.
1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் டாய் ஸ்டோரி (திரைப்படம்) வெளியானது.
1995 – சினாய் தீபகற்பம் , சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு
நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003 – ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக
அன்கெலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில்
அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

பிறப்புகள்
1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858 )
1839 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் , தமிழிசை அறிஞர் (இ.
1898 )
1890 – சார்லஸ் டி கோல் , பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)

1898 – லயனல் ராபின்ஸ் , பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984 )
1904 – மரே ராஜம் , தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)
1904 – இலூயீ நீல் , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000 )
1939 – முலாயம் சிங் யாதவ் , இந்திய அரசியல்வாதி
1943 – பில்லி ஜீன் கிங் , அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1958 – ஜேமி லீ குர்திஸ் , அமெரிக்க நடிகை
1967 – பொறிஸ் பெக்கர், செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்
1967 – மார்க் ருஃப்பால்லோ, அமெரிக்க நடிகர்
1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப், பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்
1969 – மர்ஜானே சத்ரபி , ஈரானிய எழுத்தாளர்
1970 – மாவன் அத்தப்பத்து , இலங்கைத் துடுப்பாளர்
1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன் , அமெரிக்க நடிகை
1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ் , தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்

இறப்புகள்
1718 – பிளாக்பியர்ட் , ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680 )
1774 – ராபர்ட் கிளைவ் , ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி.
1725 )

1907 – ஆசப் ஆல் , அமெரிக்க வானியலாளர் (பி. 1829 )
1944 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882 )
1963 – ஆல்டசு அக்சுலி , ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)
1963 – ஜான் எஃப். கென்னடி , அமெரிக்காவின் 35வது
அரசுத்தலைவர் (பி. 1917 )
1967 – சிதம்பரநாதன் செட்டியார் , தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907 )
1967 – தாரா சிங் , சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885 )
1974 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு , அமெரிக்க வானியலாளர் (பி. 1908 )
1988 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)
1997 – தி. சதாசிவம் , தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902 )
2011 – சுவெத்லானா அலிலுயேவா , உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938 )
2012 – பி. கோவிந்த பிள்ளை , இந்திய அரசியல்வாதி (பி. 1926 )

2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (பி.
1949 )
2016 – எம். பாலமுரளிகிருஷ்ணா , கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930 )
2016 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (பி. 1928 )

சிறப்பு நாள்
விடுதலை நாள் (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)
ஆசிரியர் நாள் ( கோஸ்ட்டா ரிக்கா ).

வெளி இணைப்புகள்

பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில் Click Here
கனடா : இந்த நாளில் Click Here


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews