2009&TET இடைநிலை ஆசிரியர்களை - ஜாக்டோ-ஜியோவில் இணைந்து போராட அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 08, 2018

2009&TET இடைநிலை ஆசிரியர்களை - ஜாக்டோ-ஜியோவில் இணைந்து போராட அழைப்பு

நேற்று 06.11.2019 மாலை ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் நமது போராட்டக்குழுவினை தொடர்பு கொண்டார்கள் வரும் 09 ம் தேதி பிரிந்து சென்ற மற்ற இயக்கங்கள் ஒன்று சேர்க்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நம்மை அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென முறையாக அழைப்பு விடுத்தார்
மேலும் ஜாக்டோ-ஜியோவில் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தனித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். *நமது தரப்பில் 7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்திய பொழுது மிக கடுமையாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்
எனவே "கடந்த 2017 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தனித்த கோரிக்கையாக" ஜாக்டோ-ஜியோவில் வைக்க வேண்டுமென கேட்டோம் ஆனால் அது புறக்கணிக்கப்பட்டது.இழந்த ஊதியத்தினை மீட்க நாங்கள் தனி சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்* *இன்று எங்களின் ஒற்றை கோரிக்கையான மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக " சமவேலைக்கு" " சம ஊதியத்தினை" விரைவில் வென்றிடுவோம் இரண்டு முறை அரசு எழுத்துப்பூர்வமான உத்திரவாதம் அளித்துள்ளது 90% க்கு மேல் வென்றுவிட்டோம் ஆகவே ஜாக்டோ- ஜியோவில் CPS மற்றும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடினால் சரியாக இருக்கும் என கூறினோம் அவர்களும் திறந்த மனதுடன் உங்களின் கோரிக்கை வென்றெடுக்க வாழ்த்துகள்,என தெரிவித்தார்.*
*ஜாக்டோ-ஜியோவில் இணைந்து போராடுவது குறித்து வரும் வாரம் மாநில செயற்குழு கூட்டம் வைத்திருக்கிறோம் அதில் மாவட்ட/ வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் கலந்து பேசி எங்கள் முடிவினை அறிவிக்கிறோம் என தெரிவித்துவிட்டோம்.* இவண் *ஜே.ராபர்ட்* *மாநில தலைமை* *2009&TET போராட்டக்குழு*
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews