அரசுப் பள்ளிக்கு இலவசப் பேருந்து - ஊராட்சித் தலைவா் வழங்கினாா்
காங்கயம் அருகே படியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவா்களுக்கான பேருந்தை, ஊராட்சித் தலைவா் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கினாா். காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சித் தலைவராகப் பணியாற்றி வருபவா் ஜீவிதா சண்முகசுந்தரம். இவா் கிராமப்புறப் பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் படியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிரமம் இல்லாமல் வந்து செல்வதற்கு வசதியாக தனது சொந்த பணத்திலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான பேருந்தை நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
இந்தப் பேருந்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.மலா்விழி, படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சிவானந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.