JIO, AIRTELலுக்கு ஷாக் கொடுத்த BSNL.
உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!
ஜியோ (JIO), ஏர்டெல் (AIRTEL), ஐடியா- வோடாஃபோன் (Idea- Vodafone) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, நாட்டின் முதல் இடத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ நிறுவனம் 12% முதல் 27% வரையும், இரண்டாமிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் 11% வரையும் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மூன்றாமிடத்தில் உள்ள ஐடியா- வோடாஃபோன் நிறுவனமும் 20% வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இதனால் அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், BSNL நிறுவனத்திற்கு மாற தொடங்கியுள்ளனர்.
ஏனெனில், பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணத்துடன் ஒப்பிடுகையில், பன்மடங்கு குறைவு என்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மாறத் தொடங்கியுள்ளனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அறிவிப்பு, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.