உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 13 ( October 13 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 13, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 13 ( October 13 )

அக்டோபர் 13 ( October 13 ) கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 54 – உரோமைப் பேரரசர் குளோடியசு நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தான், அவனது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானான். 1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. 1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து , போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது. 1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது. 1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது. 1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. [1] 1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது. 1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது. 1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார். 1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். [2] 1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர். 1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர். 1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.
1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 2013 – மத்தியப் பிரதேசம் , ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். 2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது. பிறப்புகள் 1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா , இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969 ) 1908 – புதுவை சிவம் , புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989 ) 1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997 ) 1911 – கு. வன்னியசிங்கம் , இலங்கை அரசியல்வாதி (இ. 1959 ) 1911 – அசோக் குமார் , இந்திய நடிகர், பாடகர் (இ. 2001 ) 1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013 ) 1931 – காவலூர் ராஜதுரை , ஈழத்து எழுத்தாளர் (இ. 2014 ) 1936 – சிட்டி பாபு , இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996 )
1936 – பொ. வே. பக்தவச்சலம் , மார்க்சியவாதி (இ. 2007 ) 1937 – ஏ. எச். எம். பௌசி , இலங்கை அரசியல்வாதி 1947 – அவி லேர்னர் , இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர் 1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997 ) 1956 – கிறிசு கார்ட்டர் , அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் 1982 – இயன் தோப் , ஆத்திரேலிய நீச்சல் வீரர் 1990 – பூஜா ஹெக்டே , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள் 54 – குளோடியசு , உரோமைப் பேரரசர் (பி. கிமு 10 ) 1240 – ரஸியா பேகம் . தில்லி சுல்தானா (பி. 1205 ) 1695 – எப்ரேம் தெ நேவேர் , சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603) 1911 – சகோதரி நிவேதிதை , ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867 ) 1953 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி , சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883 ) 1956 – சங்கரலிங்கனார் , தமிழக செயற்பாட்டாளர், போராளி 1987 – வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902 ) 1987 – கிஷோர் குமார் , இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929 ) 2015 – கருப்பையா வேலாயுதம் , இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950 ) 2016 – 9-ம் இராமா , தாய்லாந்து மன்னர் (பி. 1927 ) சிறப்பு நாள் பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews