பள்ளிக்கே செல்லாத சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத கல்வி வாரியம் அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 27, 2018

பள்ளிக்கே செல்லாத சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத கல்வி வாரியம் அனுமதி

பள்ளிக்கே செல்லாமல், வீட்டிலேயே படித்த 12 வயது சிறுமி 10-ம் வகுப்புத் தேர்வு எழுத மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெறும் மத்தியாமிக் தேர்வில் 12-வயது சிறுமி பங்கேற்று பொதுத்தேர்வு எழுதலாம்என்று தெரிவித்துள்ளது ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அனினுல். இவரின் 12வயது மகள் சைபா கத்தூன். இந்த சிறுமிசிறுவயது முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். இந்நிலையில், 10-ம்வகுப்புதேர்வு எழுத வேண்டும் என்றுவிரும்பியதால், அவர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்வானதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளார். இது குறித்து மேற்கு வங்க பள்ளிக்கல்வித்துறை வாரியத்தின் தலைவர் கல்யாண்மோய் கங்குலிகூறுகையில், சைபா கத்தூன் என்ற 12 வயது சிறுமி இதுவரை பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியேபடித்துள்ளார். அவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும் என்று அவரின் தந்தை முகமது அனினுல்விண்ணப்பம் அளித்திருந்தார். பள்ளியில் படிக்காமல் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தகுதித் தேர்வுஆகஸ்ட் மாதம் நடந்தது.
அதில் சைபா கத்தூன் 52 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, 12 வயதுகத்தூன் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 20 ஆண்டுகள் வரலாற்றில் 12 வயதுசிறுமி ஒருவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியதில்லை. 10-ம் வகுப்புத் தேர்வு எழுத 14வயது நிறைவடைந்திருக்கவேண்டும். ஆனால், கத்தூன் சிறப்பாகப் படித்து தேர்ச்சி பெற்றுள்ளதால், அவருக்கு இந்தவாய்ப்புவழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். சைபா கத்தூன் கடந்த ஆகஸ்ட் மாதம் தகுதித் தேர்வு எழுதினார், இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 11-ம்தேதி வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews