மத்திய அரசின் பவேறு துறைகளில் காலியாக உள்ள 1,100 பணியிடங்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின்(எஸ்.எஸ்.சி.) மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், வரும் 30-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பான அறிவிப்பை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 130 பிரிவுகளில் (குரூப் பி, குரூப் சி) 1,136 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி. தேர்வாணையத்தின் வெவ்வேறு பிராந்திய அலுவலகங்கள் வாரியாக காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி, வடக்கு பிராந்திய அலுவலகத்தின் கீழ் 36 பிரிவுகளில் 299 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து பிராந்திய அலுவலகங்களின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் எஸ்.எஸ்.சி. தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள், ஒரே நேரத்தில் வெவ்வேறு பிராந்திய அலுவலகங்களில் வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழியாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளங்களில் (எஸ்எஸ்சி தலைமையகம்- www.ssc.nic.in, , வடக்கு பிராந்தியம்- www.sscnr.net.in) வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட தேர்வினை எழுத விரும்புவோர், வரும் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Saturday, September 22, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.