தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி பார்வை செய்தார். முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு விரைவில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர், ஆசிரியர் அமைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Search This Blog
Saturday, September 22, 2018
Comments:0
Home
MINISTER
ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.