ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 29, 2018

Comments:0

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்: கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.

 
புதுக்கோட்டை,ஆக.29: தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம் தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
அந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
பொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும், தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..
அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இலவசமாக
பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews