Breaking

Sunday, July 01, 2018

பி.இ. இரண்டாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்


நடப்பு (2018-19) கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான
மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடியில் சனிக்கிழமை தொடங்கியது. பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. (கணிதம்) படித்த மாணவர்கள் நேரடியாக பி.இ. மற்றும் பி.டெக் 2 ஆம் ஆண்டு சேர்வதற்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நடப்பாண்டிற்கான முதல் நாள் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது

இதில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் லெதர், பிரிண்டிங் டெக்னாலஜி, கெமிக்கல், டெக்ஸ்டைல் ஆகிய பிரிவுகளைத் தேர்வு செய்தனர். கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை கலந்தாய்வுச் செயலர் ஏ. இளங்கோ வழங்கினார்

ஜூலை 1 மற்றும் ஜூலை 2-ஆம் தேதி மதியம் வரை சிவில் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 2 மதியம் முதல் 5 வரை மெக்கானிக்கல் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி மாலை 4.30 மணிவரை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 8 ஆம் தேதி மாலை பி.எஸ்சி. (கணிதம்) பட்டம் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog